கரூர் வடக்கு பாளையத்தில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்

கரூர், ஜூன் 25: கரூர் வடக்குப்பாளையத்தில் குடிநீர் வீணாகி வருகிறது.கரூர் அருகே உள்ள வடக்குப்பாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நேற்று தண்ணீர் வீணாக சாலையில் வழிந்தோடியது.கடும் குடிநீர் தட்டுப்பாடு உள்ள நிலையில் இவ்வாறு தண்ணீர் வீணாவதற்கு பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். குடிநீரைப் பிடித்து ஒருவாரம் 10 நாட்களுக்கு வைத்து நாங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில் இதுபோன்றுகுழாய் உடைப்பு ஏற்பட்டு பலமணிநேரம் வீணாகி கொண்டிருக்கிறது. குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டால் தண்ணீர் வீணாகாமல் உடனடியாக தடுக்க உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றனர்.


Tags : Karur North Pole ,
× RELATED ஆபத்து நிறைந்த ஆழ்குழாய் குடிநீர்