×

28 வருஷமா குடியிருக்கோம்... எங்களுக்கும் வேண்டும் இந்திய குடியுரிமை

விருதுநகர், ஜூன் 25: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் தமிழர்கள், இந்திய குடியுரிமை வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இலங்கையில் ஏற்பட்ட இன கலவரத்தை தொடர்ந்து 1990 முதல் 2007ம் ஆண்டு வரையிலான காலத்தில் இலங்கையில் இருந்து தமிழர்கள் இந்தியாவிற்கு அகதிகளாக படகுகளில் வந்தனர். ராமேஸ்வரம் முகாமில், அதிகாரிகள் விசாரணைக்கு பிறகு தமிழகத்தில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்தவகையில் விருதுநகர் மாவட்டத்தில் மல்லாங்கிணர், குல்லூர்சந்தை, செவலூர், ஆனைக்குட்டம், அனுப்பன்குளம், மொட்டமலை, கண்டியாபுரம் ஆகிய 7 முகாம்களில் 3,200 பேர் தங்கி உள்ளனர்.

இந்நிலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இந்திய குடியுரிமை கோரி வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையில் கலெக்டரிடம் மனு அளித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தி உள்ளனர். அதை தொடர்ந்து விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் செவலூர், ஆனைக்குட்டம், குல்லூர்சந்தை முகம்களில் தங்கியிருக்கும் தமிழர்கள் ஒவ்வொருவரும் கலெக்டர் சிவஞானத்திடம் மனு அளித்தனர்.
அந்த மனுக்களில் கூறியிருப்பதாவது: 13 முதல் 28 ஆண்டுகளாக முகாம்களில் தங்கி இருக்கிறோம். இலங்கை சென்று வாழ விருப்பமில்லை. இலங்கை செல்லவும் பொருள் ஆதாரம் இல்லை. எங்களது நிலை கருதி இந்திய குடியுரிமை வழங்க வேண்டும். இந்திய மக்களுக்கு நிகரான குடியுரிமை வழங்கி அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Tags : Indian ,
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்