மழை பெய்ய வேண்டி திருச்சுழியில் 1,008 திருவிளக்கு பூஜை

திருச்சுழி. ஜூன் 25: மழை பெய்ய வேண்டி, திருச்சுழியில் 1,008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
பருவ மழை பொய்த்ததால், தமிழகம் முழுவதும் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், மழை பெய்ய வேண்டி தமிழகத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜை மற்றும் யாகங்கள் நடைபெறுகின்றன. இதனடிப்படையில், திருச்சுழியில் உள்ள திருமேனிநாதர் துணைமாலையம்மன் கோயிலில் மழை பெய்ய வேண்டி சிறப்பு 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், திருச்சுழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இந்த திருவிளக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா அமைப்பினர் செய்திருந்தனர்.

Tags : pooja ,Tiruchi ,
× RELATED ராஜபாளையம் நெல் கொள்முதல் நிலையத்தில் எம்.பி., எம்.எல்.ஏ. ஆய்வு