×

மழை இல்லாததால் சூரியகாந்தி விளைச்சல் சரிவு

கம்பம், ஜூன் 25: கம்பம்மெட்டு மலையடிவாரத்தில் மழை இல்லாததால் சூரியகாந்தி விளைச்சல் சரிவை சந்தித்துள்ளது. கம்பம்மெட்டு மலையடிவார நிலங்களில் சுமார் 100 ஏக்கர்க்கும் மேல் சூரியகாந்தி பூ விவசாயம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை நடந்தது. இங்கு விளையும் சூரியகாந்தி இயற்கையிலேய அதிக சுவையுடன் இருக்கும் என்பதாலும், எண்ணெய் உற்பத்திக்கு ஏற்றதாக இருக்கும் என்பதாலும் வியாபாரிகள் போட்டிபோட்டு கொள்முதல் செய்வர். ஆனால், தற்போது போதிய மழை இல்லாமலும், உரிய ஊக்குவிப்பு இல்லாதநிலையிலும்சூரியகாந்தி விவசாய பரப்பு குறைந்து வருகிறது. கடந்த 6 மாதத்திற்கு முன்பு இயற்கை மழையை நம்பி பயிரிடப்பட்ட சூரியகாந்தி பயிர் கருகியது. ஒருசில ஏக்கர் வரை கூட சூரியகாந்தி விவசாயம் கம்பம் பகுதியில் இல்லை.

Tags :
× RELATED இடுக்கியில் இன்று பிரசாரம் நிறைவு