சாலை விதி மீறுவோர் மீது கடும் நடவடிக்கை

தேனி, ஜூன் 25: தேனி வட்டார போக்குவரத்து  அலுவலராக தர்மானந்தன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்னர், திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரிந்து பதவி பெற்று தேனிக்கு ஆர்டிஓ பதவி உயர்வு பெற்று தேனியில் பொறுப்பேற்றுள்ளார்.அவர் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் தகுதிச்சான்று இல்லாமலோ,அரசுக்கு வரி செலுத்தாமலோ, ஓட்டுநர் உரிமம் இல்லாமலோ, காப்புச்சான்று இல்லாமலோ வாகனங்களை ஓட்டக் கூடாது.  சாலை விதிகளை மீறும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Tags : road violators ,
× RELATED அய்னோவின் அதிரடி!