×

கம்பத்தில் மன அழுத்தத்தை குறைக்க செவிலியர்களுக்கு யோகா

கம்பம், ஜூன் 25:  மன அழுத்தத்தை குறைக்க கம்பம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு நேற்று முதல் யோகா பயிற்சி முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் மெல்லோட்டம், உடலை தளர்த்தும் பயிற்சிகள், யோகா விற்கு உடலை தயார் செய்யும் தயார்நிலை பயிற்சிகள், கழுத்து எலும்பு, இடுப்பு மூட்டு, முழங்கால் மூட்டு, கணுக்கால் மூட்டு இவற்றை தளர்த்தி ரிலாக்ஸ் செய்யும் பயிற்சிகளுடன் சூரிய நமஸ்காரத்தின் 12 ஆசனப் பயிற்சிகளும், காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதமார நிலைய சித்த மருத்துவர் சிராஜூதீன் கற்றுக்கொடுத்தார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் பொன்னரசன், செவிலியர் கண்காணிப்பாளர் ஜோஸ்பின் ஜென்னி ஆகியோர் செய்திருந்தனர். டாக்டர் சிராஜூதீன் கூறுகையில், `` இந்த முகாமில் நாள்தோறும் யோகாவின் அனைத்து பயிற்சி முறைகளும் தொடர்ந்து பயிற்றுவிக்கப்படும். இதனால் செவிலியர்களுக்கு பணிப்பளு அதிகரித்தாலும் எளிதாக பணிபுரியும் மனநிலை உருவாகும். மன அழுத்தமும் குறையும்’’ என்றார்.

Tags : nurses ,
× RELATED தமிழகத்தில் தற்காலிகமாக பணியாற்றி...