டூவீலரில் சென்றவர் பேரிகார்டில் மோதி பலி

காரைக்குடி, ஜூன் 25: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பொன் நகரை சேர்ந்தவர் ராஜாராமன்(45). டிவி மெக்கானிக், இவர் நேற்றுமுன்தினம் இரவு 11 மணி அளவில் காரைக்குடி வருமானவரி அலுவலகம் முன்பு தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, நிலை தடுமாறி கல்லூரி சாலையில் அமைந்துள்ள சாலை தடுப்பு பேரிகார்டில் மோதினார். இதில் படுகாயமடைந்த ராஜாராமன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்க்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச் சம்பவம் குறித்து காரைக்குடி வடக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
× RELATED காரைக்குடியில் பட்டா கத்தியுடன் ரவுடிகள் ரகளை