இன்று மின் குறைதீர் கூட்டம்

சிவகங்கை, ஜுன் 25: காரைக்குடியில் மின் பயனீட்டாளர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று (ஜுன்.25) நடக்க உள்ளது. சிவகங்கை மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் சின்னையன் தெரிவித்ததாவது, ‘காரைக்குடியில் ஜுன் மாதத்திற்கான மாதாந்திர மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம் இன்று, காலை 11 மணி முதல் 1 மணி வரை காரைக்குடி மின் பகிர்மான செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்க உள்ளது. இதில் காரைக்குடி கோட்டத்திற்கு உட்பட்ட மின் பயனீட்டாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்துகொண்டு மின்வாரியம் தொடர்பான தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளவும். இவ்வாறு தெரிவித்தார்.

Tags : powerhouse meeting ,
× RELATED உள்ளாட்சி தேர்தல் காங்கிரஸ் நிர்வாகிகள் விருப்பமனு தரலாம்