வாலிபர் சங்க பேரவை கூட்டம்

சிவகங்கை, ஜுன் 25: சிவகங்கையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட பேரவைக்கூட்டம் மாவட்டத்தலைவர் சுரேஷ் தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் தென்னரசு, மாவட்ட பொருளாளர் ஜேம்ஸ்ராஜா முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் பாலா, மாநில இணைச் செயலாளர் சிவராமன், மாவட்ட துணைச்செயலாளர்கள் காவியபாரதி, வசந்தகுமார், மாவட்ட துணைத்தலைவர் மணிகண்டபிரபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். சிவகங்கை அருகே கோமாளிப்பட்டி பகுதியில் 940 ஏக்கரில் கிராபைட் கனிமத்தை பயன்படுத்தி ரூ.ஆயிரம் கோடி நிதியில் 50 ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நெல்லை மாவட்ட பொருளாளர் அசோக் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய செயலாளர் தங்கராஜ் நன்றி கூறினார்.

Tags : Youth Association ,meeting ,
× RELATED காரைக்குடியில் பட்டா கத்தியுடன் ரவுடிகள் ரகளை