சிங்கம்புணரியில் உள்ள பஸ்ஸ்டாண்டில் சேதமடைந்த கழிவுநீர் கால்வாய் சிலாப்புகள்

சிங்கம்புணரி, ஜூன் 25: சிங்கம்புணரி பஸ்ஸ்டாண்டில் உள்ள கழிவுநீர் கால்வாய்களின் மேல் உள்ள சிலாப்புகள் சேதமடைந்து கிடப்பதால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். சிங்கம்புணரி பஸ்ஸ்டாண்டிற்குள் உள்ள கழிவுநீர் கால்வாய் சிலாப்புகள் 6 மாதங்களுக்கும் மேலாக உடைந்துள்ளது. பேருந்து நிலையத்திற்குள் உள்ள கடைகள் முன்பு இந்த சாக்கடை கால்வாய் செல்கிறது. வெயில் காரணமாக பஸ்சிற்காக காத்திருக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் பயணிகள் கடைகளின் முன்பு காத்திருக்கின்றனர்.

பஸ் வரும்போது அவசரத்தில் சாக்கடை கால்வாயில் கால் தவறி விழும் நிலை உள்ளது.  மேலும் பஸ்ஸ்டான்டிற்குள் உள்ள பொது கழிப்பறையிலிருந்து கழிவுகள் வெளியேறுவதால் கடுமையான துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே பேரூராட்சி நிர்வாகம் சேதமடைந்த கழிவுநீர் கால்வாய் சிலாப்புகளை சீரமைக்க பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bus stand ,Singapore ,
× RELATED பாராக மாறி வரும் சிதம்பரம் பஸ் நிலையம்