காளையாளர்கோவிலில் சமூகவிரோதிகளின் கூடாரமாகும் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை

காளையார்கோவில், ஜூன் 25: காளையார்கோவிலில் உள்ள பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை நுழைவுவாயில் காம்பவுண்ட் சுவர் உடைந்து பல மாதங்களாகியும் யாரும் கண்டுகொள்ளவில்லை என சமூகஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். காளையார்கோவிலில் உள்ள பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. சில வருடங்களுக்கு முன்பு மராமத்துப்பணிகள் செய்யப்பட்டன. கட்டிடத்தை சுற்றி பாதுகாப்புக்காக மதில் சுவர் எடுக்கப்பட்டு நுழைவுவாயிலில் இரும்பு கிரீல் பொருத்தப்பட்டு பாதுகாப்புடன் இருந்துவந்தது. பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகைக்கு அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் அடிக்கடி பணி நிமித்தமாக வந்து தங்கும் வககையில் மிகுந்த பாதுகாப்புடன் இருந்து வந்த மாளிகை தற்போது நுழைவு வாயில் காம்பவுண்ட் மற்றும் இரும்பு கிரீல்கேட் வாகனம் மோதியதில் இடிந்து நொறுங்கி விழுந்து பல மாதங்கள் ஆகிவிட்டன.

 தற்போது வரை இடிந்த காம்பவுண்ட் சுவரை கட்டுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பொதுப்பணித்தறை ஆய்வு மாளிகை பாதுகாப்பற்ற முறையில் இருப்பதால் இரவு நேரங்களில் சமூக விேராதிகள் உள்ளே புகுந்து தீய செயல்களில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் பொதுப்பணித்துறை  ஆய்வு மாளிகையில் தங்குவதற்காக வரும் அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை துறையைச் சோர்ந்த அதிகாரிகள் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை நுழைவுவாயில் காம்பவுண்ட் மற்றும் இரும்பு கிரீல்கேட்டை கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Public Works Research House ,anti-socials ,Kaliyarkar Temple ,
× RELATED முரசொலி மாறன் மேம்பாலம் அருகே...