அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்திய 25 பேர் மீது வழக்கு

சிவகங்கை. ஜூன் 25: சிவகங்கை மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் அனுமதி இல்லாமல் மஞ்சுவிரட்டு நடத்தியதால் 25 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக சிங்கம்புணரி விஏஓ அருண் கொடுத்த புகாரின் பேரில் மகேந்திரன், முரளி உட்பட 10 பேர் மீது சிங்கம்புணரி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை அருகே இளங்குடி கிராமத்தில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக  விஏஓ ராஜநசக்கரவர்த்தி கொடுத்த புகாரின் பேரில் அருண்குமார், கருப்பையா உட்பட 10 பேர்் மீது நாச்சியார்புரம்் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதை தொடர்ந்து சிவகங்கை அருகே சாலைகிராமத்தில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக விஏஓ முத்தரசு கொடுத்த புகாரின் பேரில் சங்கர் மற்றும் 4 பேர் மீது சாலைகிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : persons ,
× RELATED தெலங்கானா என்கவுன்டர் விவகாரம் 4 பேர்...