×

உணவு பொருட்கள் வாங்கும் போது காலாவதியாகும் தேதி பார்த்து பொருட்கள் வாங்க வேண்டும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்

சிவகங்கை, ஜுன் 25: உணவு பொருட்கள் வாங்கும் போது காலாவதி தேதி உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் பார்த்து வாங்க வேண்டும் என பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான உணவுப் பொருள்களை மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகளிடமிருந்து வாங்கும்போது பொட்டலமிட்ட உணவுப் பொருட்கள் மீது அச்சிடப்பட்டுள்ள லேபிள்களில் அந்த உணவுப் பொருள் எந்த தேதியில் தயாரிக்கப்பட்டது என பார்க்க வேண்டும்.

அப்பொருளில் சேர்க்கப்பட்டுள்ள மூலப்பொருள்கள், உணவு பாதுகாப்பு உரிமம் எண், காலாவதியாகும் தேதி போன்ற விபரங்கள் உணவுப் பொருள்கள் உறையின் மீது அச்சிடப்பட்டுள்ளதா எனவும் பொதுமக்கள் பார்த்து வாங்க வேண்டும். இதுபோன்ற விபரங்கள் இல்லாத உணவுப் பொருள்களை நுகர்வோர்கள் வாங்க வேண்டாம். உணவுப் பொருட்கள் சம்பந்தபட்ட புகார்களுக்கு உணவு பாதுகாப்புத்துறையின் வாட்ஸ் அப் எண் 94440 42322ல் புகார் அளிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED உலக புத்தக தின விழா