×

லாரி மூலம் குடிநீர் விநியோகம்: அமைச்சர் துவக்கி வைத்தார்

கீழக்கரை, ஜூன் 25:  திருப்புல்லாணி ஒன்றியம் தில்லையேந்தல் ஊராட்சி பள்ளமோர்குளம் கிராமத்திற்கு தமிழக அரசின் இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தை அமைச்சர் மணிகண்டன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் தற்போது வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பட்டை போக்கும் விதமாக குடிநீர் செல்ல முடியாத கிராமங்களுக்கு டேங்கர் லாரி மூலம் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கிட குடிநீர் வடிகால் வாரியம் முடிவு செய்தது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ரூ.60 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளதை தொடர்ந்து திருப்புல்லாணி, போகலூர், நயினார்கோவில்,

பரமக்குடி, கடலாடி, கமுதி, முதுகுளத்தூர் ஒன்றியங்களை சார்ந்த 45 ஊரக குடியிருப்புகளுக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை டேங்கர் லாரி மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை பள்ளமோர்குளத்தில் அமைச்சர் மணிகண்டன் தொடங்கி வைத்தார். கலெக்டர் வீரராகவராவ் தலைமை வகித்தார். இதில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் மங்களநாத துரை, ஜெயஜோதி, ராமமூர்த்தி, தஞ்சி சுரேஷ் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை