×

அரசின் நலத்திட்டங்கள் கிடைக்கல... கோனேரியேந்தல் கிராமத்தினர் வேதனை

ராமநாதபுரம், ஜூன் 25:  முதுகுளத்தூர் தாலுகா கோனேரியேந்தல் கிராம பொதுமக்கள் சார்பில் குடிநீர் கேட்டு கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில், முதுகுளத்தூர் தாலுகா கோனேரியேந்தல் கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் அனைவரும் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கு அரசிடமிருந்து நலத்திட்டங்கள் ஏதுவும் கிடைக்கப் பெறுவதில்லை. நாங்கள் இந்த கிராமத்தில் குடிநீருக்காக போர்வேல் கிணறுகள் ஏதும் இல்லாமல் மிகுந்த சிரமத்துடன் கஷ்டமான சூழ்நிலையில் உள்ளோம். தண்ணீர் இல்லாத நிலையில் தொற்றுநோய் ஏற்படும் என்ற அபாயகரமான சூழ்நிலை உள்ளது. தண்ணீர் கிடைக்காமல் முதியோர்கள் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மயக்கம் அடைந்து விழுகிறார்கள். இதுபோன்ற நிலை கிராமத்தினரை மிகவும் வேதனையடைய செய்கிறது.

கலெக்டர் ஆதிதிராவிட பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் நலன் கருதி மிக மிக முக்கியமான அத்தியாவசிய தேவையான குடிநீர் பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டுமாயின் கேட்டுக்கொள்கிறோம். இது தொடர்பாக அதிகாரிகளை சந்தித்தும் எங்களுக்கு தண்ணீர் கிடைக்க வில்லை. எங்களின் வாழ்வாதாரத்தை நிறைவேற்றும் பொருட்டு குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கேட்டுக்கொள்கிறோம். தண்ணீர் தட்டுப்பாட்டால் பல கிராமங்கள் பல மைல்கள் சென்று தண்ணீர் கொண்டுவர முடியவில்லை. வேலை செய்யும் நபர்கள் குளிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். குடி தண்ணீர் குறைபாட்டையும், பிற தேவைகளுக்கான தண்ணீர் கிடைக்க ஊராட்சி தண்ணீர் டேங்க் மூலமாக தண்ணீர் சப்ளை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை