×

பரமக்குடி,முதுகுளத்தூர் ஒன்றியங்களில் கற்பித்தல் இல்லாத பணிகளில் ஆசிரியர்கள் வகுப்புகளை தவிர்ப்பதால் வேதனை

பரமக்குடி, ஜூன் 25: கற்பித்தல் அல்லாத பிறபணிகளில், ஆசிரியர்களை ஈடுபடுத்துவதால், வகுப்புகளை கையாள முடியாமல் வேதனைக்குள்ளாகி வருவதாக  புலம்புகின்றனர். தமிழக பள்ளி கல்வித்துறை சார்பாக நலத்திட்ட பொருள்களை நேரடியாக வினியோகம் செய்ய நடப்பு ஆண்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட வழிதடங்கள் அமைத்து, லாரிகள் மூலம் புத்தகம், நோட்டு, சீருடை உள்ளிட்ட பொருள்கள் வினியோகிக்கப்பட்டது. இந்த பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்த வேண்டாம் என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் உதவி தொடக்கல்வி அலுவலர் அலுவலகங்களில் உள்ள டைப்பிஸ்ட், உதவியாளர், இரவு நேர காவலர்கள் உள்ளிட்ட அடிப்படை ஊழியர்களின் பணிடங்கள் காலியாக உள்ளதால், நலத்திட்ட பொருள்களை வினியோகம் செய்ய  சிரப்பட்டு வந்தனர்.

இதனால் பரமக்குடி,முதுகுளத்தூர் உள்ளிட்ட ஒன்றியங்களில் பள்ளி ஆசிரியர்களை வரவழைத்து, மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தபடி, நலத்திட்ட பொருள்களை பிரித்து எடுக்குமாறு அறிவுறுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் அலுவலக பணியாளர்கள் ஆசிரியர்களை வரவழைப்பதாகவும் கூறப்படுகிறது. உயர் அதிகாரிகளை எதிர்த்து பே முடியாததாலும்,புகார் அளிக்கவும் முடியாமல் ஆசிரியர்கள் தயங்குகின்றனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் தரப்பில் கூறுகையில், ‘‘உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் உள்ள காலி பணியிடங்களை காரணம் காட்டி,ஆசிரியர்களை பிற பணிகளில் ஈடுபடுத்தி வருகின்றனர். இதனால் வகுப்புகளை முறையாக கையாள முடியாத நிலை உள்ளது. கற்பித்தல் அல்லாத பணிகளில், ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது என்று உத்தரவு உள்ளது. இதை மீறும் அதிகாரிகள் மீது உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

Tags : Teachers ,Mudukulathur Unions ,Paramakudi ,
× RELATED கல்வி அதிகாரி நேரடி விசாரணை...