சாலை பணியை முடிக்க 18 முறை மனு அளித்தும் பயனில்லை வேதனையில் கிராமமக்கள்

ராமநாதபுரம், ஜூன் 25: ராமநாதபுரம் அருகே குமரியேந்தல் கிராம பொதுமக்கள் சார்பில் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில், ராமநாதபுரம் காரேந்தல் ஊராட்சி குமரியேந்தல் கிராமத்திற்கு பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் சாலை அமைப்பதற்காக ரூ.3.65 கோடி ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டது. புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் முடிவடையும் ஒப்பந்த தேதி 25..12.2018 என கூறப்படுகிறது. ஆனால் ஒப்பந்தகாரர் இதுவரை 30%  சாலை பணிகளை மட்டுமே நிறைவு செய்துள்ளார்.

அந்தப் பணிகள் தரமற்ற நிலையில் உள்ளது. ஜல்லி கற்கள் சரியாக அமைக்காததால் வாகனங்கள் செல்லும் வகையில் தார் சாலை இல்லை. இந்த சாலைக்காக இதுவரை 18 முறை மனு அளித்துள்ளோம். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நேரடியாக வந்து பார்வையிட்டு சாலைப் பணியை விரைந்து முடித்திட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Tags :
× RELATED தாம்பரம் - கடற்கரை மார்க்கத்தில் இன்ஜின் கோளாறால் ரயில் சேவை பாதிப்பு