குறைந்தழுத்த மின்சாரத்தால் பழுதாகும் மின்சாதனங்கள் பொதுமக்கள் குற்றச்சாட்டு

ராமநாதபுரம், ஜூன் 25: மரைக்காயரபட்டிணம் கிராம இளைஞர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘‘எங்கள் ஊரில் கடந்த சில வருடங்களாக மின்சார பற்றாக்குறையால் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. முக்கிய காரணமாக ஊரில் 450 மின் இணைப்புகள் இருந்தும் அதற்கு ஏற்றவாறு மின்சாரம் சரிவர கிடைக்க வில்லை. அனைத்து இணைப்புகளுக்கும் 150 வோல்ட் மின்சாரமே கிடைக்கிறது. அதுவும் தொடர்ச்சியாக கிடைப்பதில்லை. பொதுமக்களாகிய நாங்கள் எங்களுடைய வாழ்வாதாரத்தையும் மின் சாதனப் பொருட்களையும் இழந்து பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகிறோம்.

இதை பற்றி மின்வாரியத்திடம் கேட்ட போது மின்வயர்களும், டிரான்ஸ்பார்மர் மாற்றினால் மட்டுமே தீர்வு என சொல்லி விட்டனர். இது தொடர்பாக பலமுறை மின்சாரத் துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பயனுமில்லை. கலெக்டர் தலையிட்டு நடவடிக்கை எடுத்து எங்கள் ஊருக்கு புதிய டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்வயர்கள் மாற்றியும் தர வேண்டுமெ கேட்டுக்கொள்கிறோம்’’ என்றனர்.

Tags :
× RELATED மின்வாரிய ஊழியர்களுக்கு வரும் 23ம் தேதி அகவிலைப்படி