×

நூறுநாள் வேலை திட்டத்தில் சம்பளம் வழங்க வில்லை பணியாளர்கள் குற்றச்சாட்டு

ராமநாதபுரம், ஜூன் 25:  மாவட்டத்தில் சிறுதலை ஊராட்சி பகுதிகளில் நூறு நாள் வேலை திட்டத்தில் ஊதியம் மிகமிக குறைத்து வழங்கப்படுவதாக கூறி பணியாளர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். சிறுதாலை ஊராட்சியில் வாத்தியனேந்தல், பனையடினேந்தல் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. கிராமத்தில் செயல்படுத்தப்படும் நூறுநாள் வேலைத் திட்டத்தில் தினக்கூலியாக ரூ.30 என வழங்கப்படுவதாக அக்கிராமப் பெண்கள் நூற்றுக்கணக்கானோர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் தங்களிடம் உள்ள நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்துக்கான அட்டைகளையும் கொண்டு வந்திருந்தனர். ஊராட்சி செயலர்,

அலுவலர்கள் நூறுநாள் வேலை வாய்ப்பில் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும், தங்களுக்கான உரிய ஊதியத்தை வழங்காமல் மிகவும் குறைவான ஊதியம் அளிப்பதாகவும் பெண்கள் முறையிட்டு தரையில் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுதாலை ஊராட்சிப் பகுதியில் காவிரிக் கூட்டுக்குடிநீர் திட்டம் முறையாக செயல்படுத்தப்பட வில்லை என்றும், இதனால் குடம் நீர் ரூ.10 முதல் ரூ.20 வரை விலை கொடுத்து வாங்குவதாகவும் பெண்கள் கூறினர். சாலை, மின்விளக்கு என எந்த அடிப்படை வசதியும் சிறுதாலை ஊராட்சிப் பகுதிகளில் செயல்படுத்தப்படவில்லை என்று கூறினர். இது குறித்து கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை