×

டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

ராமநாதபுரம், ஜூன் 25:  பரமக்குடி தாலுகா பாம்பு விழுந்தான் பர்மா காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில், இப்பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு  மேலாக வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறோம். தற்போது எங்கள் குடியிருப்பு வீடுகளுக்கு அருகே புதிய மதுபானக்கடை திறக்கும் திட்டத்துடன் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் நேரில் வந்து இடத்தை பார்வையிட்டு தேர்வு செய்து சென்றுள்ளார். அந்த இடத்தில் மதுக்கடைகளை திறக்க திட்டமும் இருப்பதாக தெரிய வருகிறது. இந்த இடத்தில் மதுபான கடை திறக்கும் பட்சத்தில் பொதுமக்கள் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் பெண்கள் வீட்டுக்கு வெளியே வர அச்சமான சூழ்நிலை ஏற்பட்டு விடும்.

மேலும் எங்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் மிக முக்கியமான சாலையாக அப்பகுதி உள்ளது. எங்கள் பயன்பாட்டிற்கு ஒரே நீராதாரமாக பாம்புவிழுந்தான் முத்துகாத்தம்மன்  ஊரணி செல்லும் வழியும், அழகிய மீனாள் கோவிலுக்கு சாமி கும்பிட செல்வதற்கு செல்லும் வழியும் அதுவே ஆகும். இப்பகுதியில் வாழும் மக்களின் பள்ளி மாணவ, மாணவிகள் நலன் கருதியும் கோயில்களுக்கு செல்லும் பிரதான சாலைக்கு பாதிப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சிலர் இந்த இடத்தைத் தேர்வு செய்திருப்பது எங்களுக்கு வேதனையாக உள்ளது. ஆகவே டாஸ்மாக் கடை அமைவதை தடுத்து நிறுத்தி எங்கள் வாழ்வாதாரத்தையும் காக்க கேட்டுக்கொள்கிறோம் என்று கூறப்பட்டிருந்தது.

Tags : collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...