×

மாநகராட்சி பணிகளை கமிஷனர் ஆய்வு

மதுரை, ஜூன் 25:  ரூ.2.77 கோடி செலவில் மாநகராட்சி மண்டலம்1ல் நிறைவடையும் நிலையில் உள்ள பணிகளை கமிஷனர் விசாகன் ஆய்வு செய்தார். மதுரை மாநகராட்சி வார்டு 18ல் சுப்பிரமணியபிள்ளை தெரு, பார்த்தசாரதி சாலை, அன்னை அபிராமி தெரு, வினோத் சாலை, மல்லிகை தெரு, பாஸ்டின் நகர் 5வது தெரு, நேதாஜி தெரு ஆகிய பகுதிகளில் ரூ.1 கோடியே 21 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக தார்ச்சாலை மற்றும் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. வார்டு 21ல் பெத்தானியாபுரம் டவர் லைன், பாஸ்டின் நகர் பகுதிகளில் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை மெயின் குழாய் மாற்றி அமைக்கப்பட்டது.

பெத்தானியாபுரம் கழிவுநீரேற்று நிலையத்தில் ரூ.14.90 லட்சம் மதிப்பீட்டில் புதிய கிணறு அமைக்கப்பட்டு வருகிறது. வார்டு 19ல் சொக்கலிங்கநகரில்  ரூ.19 லட்சத்தில் பேவர்பிளாக் சாலை போடப்பட்டுள்ளது. ஸ்ரீராம் நகர், முத்துராமலிங்கதேவர் தெரு ஆகிய பகுதிகளில் ரூ.4 லட்சம் மதப்பீட்டில் பாதாள சாக்கடை குழாய் பதித்தல் பணி உள்பட மொத்தம் ரூ.2கோடியே 77லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்டப்பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இதனை கமிஷனர் விசாகன் ஆய்வு மேற்கொண்டார். செயற்பொறியாளர் (திட்டம்) ரெங்கநாதன், உதவி கமிஷனர் முருகேசபாண்டியன், உதவி செயற்பொறியாளர்கள் (திட்டம்) இந்திராதேவி, சுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags :
× RELATED ஒரு ஓட்டு கூட போடாத இரண்டு கிராமமக்கள்