கைவிட்ட மகன்கள் மூதாட்டி தற்கொலை

திருமங்கலம், ஜூன் 25: திருமங்கலம் அருகே மகன்கள் கைவிட்டதால் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். திருமங்கலம் அருகேயுள்ள எஸ்பி.நத்தம் அடுத்துள்ள பெருமாள்பட்டியை சேர்ந்தவர் வையாபுரி மனைவி சுப்பம்மாள்(80). மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவரும் வெளியூரில் குடியிருந்து வருகின்றனர். சுப்பம்மாள் தனிமையில் இருந்துள்ளார். இதனால் மனவேதனையடைந்த அவர் நேற்று முன்தினம் இரவு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் படுகாயமடைந்து உயிரிழந்தார். கள்ளிக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags : sons ,
× RELATED ஏடிஜிபியாக பதவி உயர்வு மதுரை கமிஷனருக்கு பொதுமக்கள் பாராட்டு