விவசாய கடனை ரத்து செய்யக்கோரி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மதுரை, ஜூன் 25: கரும்புக்கான விலையை நிர்ணயம் செய்ய அமைக்கப்பட்ட ரெங்கராஜன் கமிட்டியை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் மதுரையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரும்புக்கான விலை யை நிர்ணயம் செய்ய அமைக்கப்பட்ட ரெங்கராஜன் கமிட்டியை நீக்க வேண்டும். விவசாயிகளின் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். விவசாயிகள் மீது ஜப்தி நடவடிக்கை எடுக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், முல்லைப் பெரியாறு ஒரு போக விவசாயிகள் நலசங்கம் இணைந்து மதுரை அண்ணாநகரில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க, மாநில தலைவர் வழக்கறிஞர் பழனிச்சாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் நலச்சங்க மதுரை மாவட்டத் தலைவர் இளங்கோவன், செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

Tags : Sugarcane farmers ,
× RELATED கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய...