×

ஏலச்சீட்டு மோசடி இரண்டு பேர் கைது

மதுரை, ஜூன் 25: ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை புது ராம்நாட் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் துவாரகன். இவர் எல்ஐசி நடராஜன் என்பவரிடம் தனது சகோதரர் பெயரில் ரூ.5 லட்சம் ஏலச்சீட்டு சேர்ந்தார். மாதம் தோறும் ரூ.12,500 வீதம் 25 மாதங்கள் ரூ.3,12,500 கட்டி முடித்துவிட்டார். பின்னர் ஏலச்சீட்டு கட்டிய பணத்ைத கேட்டார். ஆனால் எல்ஐசி நடராஜன் பணத்தை தர மறுத்துவிட்டார். இதனை தொடர்ந்து துவாரகன், மதுரை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த எல்ஐசி நடராஜன், அவரது மைத்துனர் மகுடீஸ்வரன் ஆகிய இருவரையும் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED பல கோடி ரூபாய்க்கு விற்க முயற்சி கடத்தல் சிலை பறிமுதல்: இருவர் கைது