×

குடிநீர் தட்டுப்பாடு திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பரங்குன்றம், ஜூன் 25: திருநகரில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டுகொள்ளாத தமிழக அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குடிநீர் தட்டுப்பாட்டை கண்டுகொள்ளாத தமிழக அரசை கண்டித்து திமுக சார்பில் நேற்று திருநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், திருப்பரங்குன்றம் எம்எல்ஏ டாக்டர் சரவணன், தெற்கு பகுதி செயலாளர் உசிலை சிவா உள்ளிட்டோர் சைக்கிளில் காலிக்குடங்களை தொங்கவிட்டபடி ஹார்விபட்டியில் இருந்து திருநகருக்கு வந்தனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதில் திருநகர், சுந்தர்நகர், பாலாஜி நகர், ஹார்விபட்டி, மகாலட்சுமி காலனி ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் காலி குடங்களுடன்
கலந்துகொண்டு அதிமுக அரசுக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பகுதி செயலாளர்கள் கிருஷ்ணபாண்டி, ஈஸ்வரன் மற்றும் ஏர்போர்ட் பாண்டி, கசிமாயன், சேது பாலகிருஷ்ணன், ஆறுமுகம், ரமேஷ், டெப்போ ரவி, ராதாகிருஷ்ணன் மற்றும் பகுதி, வட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திருநின்றவூர் பேரூராட்சியில்...