குறைதீர் கூட்டம்

மதுரை, ஜூன் 25: மதுரை மாநகராட்சி கமிஷனர் விசாகன் அறிக்கை; மதுரை மாநகராட்சி மண்டலம்4ல் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெறுகிறது. இன்று காலை 10.30 மணி முதல் 12 மணி வரை மண்டலம் 4 அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் கமிஷனர் விசாகன் தலைமையில் நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் முகாமில் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர்மாற்றம், புதிய வரி விதித்தல், கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு உள்ளிட்ட தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.

× RELATED கோவிந்தபுரத்தில் சிறப்பு குறைதீர் கூட்டம்