×

பழநி சண்முகாநதியில் அமலை செடி அகற்றம்

பழநி, ஜூன் 25: கோயில் நகரான பழநிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் பழநி- உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சண்முகாநதியில் குளித்து விட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் சண்முகாநதி ஆற்றில் தற்போது அமலை செடிகள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் பக்தர்கள் குளிக்க முடியாமல் அவதியடைந்து வந்தனர். இதனால் தன்னார்வலர்கள் அமலை செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இந்து தமிழர் கட்சியின் சார்பில் அமலை செடிகளை அகற்றும் பணி நடந்தது.

மாநில நிறுவன தலைவர் ராம.ரவிக்குமார் தலைமை வகிக்க, மாநிலக்குழு உறுப்பினர் மனோஜ்குமார், மாவட்டக் குழு உறுப்பினர் மருதுபாண்டி, நகர அமைப்பாளர் ரிஷி, நிர்வாகிகள் ஹரி, பாலா, ஆனந்தன் உள்ளிட்டோர் அமலை செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக பக்தர்கள் குளிக்கும் கரையோரமுள்ள அமலை செடிகள் அப்புறப்படுத்தப்பட்டன. பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வகையில் சேவை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

Tags : plant ,
× RELATED கழிவுநீர் கால்வாய் அடைப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்