மாவட்டம் நோய் அபாயம் யோகா தின விழா

ஒட்டன்சத்திரம், ஜூன் 25: ஒட்டன்சத்திரம் எஸ்பிஎம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. தாளாளர் ரத்தினம் தலைமை வகிக்க, செயலாளர் சபரிதர் முன்னிலை வகித்தார். முதல்வர் கணேசமூர்த்தி யோகாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். துணை முதல்வர் கல்பனா யோகாவின் சிறப்புகளை விளக்கி கூறினார். மாணவ, மாணவிகள் பல்வேறு வகையான யோகாசனங்களை செய்து காட்டி அசத்தினர். இதில் ஆசிரிய, ஆசிரியைகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : District Disease Risk Yoga Day Festival ,
× RELATED சேத சாலையால் சிரமம் திண்டுக்கல்லில் திமுக கட்சி தேர்தல் ஆலோசனை