வத்தலக்குண்டுவில் ஒரு மாத சாலையில் விழுந்தது ஓட்டை

வத்தலக்குண்டு, ஜூன் 25: வத்தலக்குண்டு காந்திநகரில் சாலை அமைத்த ஒரு மாதத்திலே குழி விழுந்ததால் வாகனஓட்டிகள் அச்சத்துடனே கடந்து சென்று வருகின்றனர். வத்தலக்குண்டு காந்திநகர் மெயின்ரோட்டில் கடந்த மாதம் தார்ச்சாலை போடப்பட்டது. கடந்த 5 நாட்களுக்கு முன்பு இந்த சாலையில் ஏடிஎம் அருகே திடீரென ஒரு அடி உயரத்திற்கு தண்ணீர் கொப்பளித்து 10 நிமிடத்தில் நின்றது. தற்போது அந்த இடத்தில் 2 அடி ஆழத்திற்கு குழி ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் மின்விளக்கு இல்லாததால் இரவுநேரங்களில் டூவீலர்களில் வருவோர் இந்த குழியில் சிக்கி விழும் அபாயம் உள்ளது.

இச்சாலையில் 3 பள்ளிகள் உள்ளன. இதனால் சைக்கிளில் வரும் மாணவர்கம் குழியில் விழும் அபாயம் உள்ளது. எனவே பேரூராட்சியினர் குழியினை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். இதுகுறித்து சமூகஆர்வலர் தங்கப்பாண்டி கூறுகையில், ‘நீண்ட காலமாக காந்திநகர் மெயின்ரோடு குண்டும், குழியுமாக இருந்தது. பல்வேறு போராட்டங்களுக்கு பின் கடந்த மாதம் சாலை அமைத்தனர். ஆனால் போட்ட ஒரு மாதத்திலே சாலையில் குழி விழுந்து விட்டது. இது தரமான முறையில் சாலை போடவில்லை என்பதையே காட்டுகிறது. எனவே சாலையில் விழுந்த திடீர் குழியை உடனே மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : road ,
× RELATED வத்தலக்குண்டுவில் தலைமை பண்பு பயிற்சி முகாம்