பழநியில் நடந்தது ஒட்டன்சத்திரத்தில் குடிநீர் புகாரா? போன் போடுங்க நகராட்சி அறிவிப்பு

ஒட்டன்சத்திரம், ஜூன் 25: ஒட்டன்சத்திரம் நகராட்சியில் குடிநீர் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையாளர் பா.தேவிகா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, ‘தமிழக அரசு உத்தரவுப்படி ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் குடிநீர் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களது புகார்களை தொலைபேசி- 04553 240255, செல்- 7373735823 ஆகிய எண்களுக்கு காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை புகார்களை தெரிவிக்கலாம். மேலும் பொதுமக்கள் குடிநீரினை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும், மழைநீரை சேகரிக்க தங்கள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் வணிக வளாக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டமைப்பு வசதி ஏற்படுத்த வேண்டும்’ இவ்வாறு கூறினார்.

Tags :
× RELATED ஆபத்து நிறைந்த ஆழ்குழாய் குடிநீர்