×

மீன் பண்ணை அமைக்க எதிர்ப்பு ஜேசிபியை முற்றுகையிட்டு போராட்டம்

கொடைக்கானல், ஜூன் 25: மீன் பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கொடைக்கானல் அருகே கவுஞ்சியில் ஜேசிபி இயந்திரத்தை முற்றுகையிட்டு கிராமமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கொடைக்கானல் மேல்மலை கிராமம் கவுஞ்சி. கொடைக்கானலில் இருந்து 40 கிமீ தொலைவில் அமைந்துள்ள இவ்வூரில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு விவசாயமே பிரதானமாக உள்ளது. இந்நிலையில் தமிழக மீன்வளத்துறை கவுஞ்சி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே மீன் பண்ணை அமைக்க நிலத்தை தேர்வு செய்து ஜனவரி மாதத்தில் அதற்கான பணிகளை துவக்கியது.

இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பணிகளை நிறுத்தி இயந்திரங்களை திருப்பி அனுப்பினர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீன்வளத்துறையினர் மீண்டும் பணிகளை துவக்க ஜேசிபி இயந்திரத்துடன் வந்தனர். இதையறிந்த மக்கள் மீன் பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஜேசிபியை முற்றுகையிட்டனர். இதையடுத்து மீன்வளத்துறையினர் பணிகளை மேற்கொள்ளாமல் திரும்பி சென்றனர்.

Tags : fish farm ,
× RELATED ரூ.2.50 கோடியில் நவீனமாகிறது ஊட்டி...