×

கலெக்டரிடம் புகார் மலையை மறைத்த மழை மேகம் கொடைக்கானல் பள்ளிகளில் புத்தகங்கள் வழங்குவதில் தொடர்ந்து தாமதம் மாணவர்கள் அவதி

கொடைக்கானல், ஜூன் 25: கொடைக்கானலில் உள்ள பள்ளிகளில் புத்தகங்கள் வழங்க தொடர்ந்து தாமதப்படுத்தி வருவதால் மாணவர்கள் பாடங்களை படிக்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் கடந்த 3ம் தேதி திறக்கப்பட்டன. ஆனால் இதுவரை பெரும்பாலான பள்ளிகளுக்கு முழுமையான புத்தகங்கள் வழங்கப்படவில்லை. இதனால் பாடம் நடத்துவதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு மாணவர்கள் கல்வி கற்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கொடைக்கானலில் உள்ள பள்ளிகளில் 1, 2, 3 ஆகிய வகுப்புகளுக்கு புத்தகங்கள் முதல் தவணையாக ஜூன் முதல் வாரத்தில் அதுவும் பாதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. 4, 5,6 ஆகிய வகுப்புகளுக்கு முற்றிலுமாக வழங்கப்படவில்லை. இதேபோல் மற்ற வகுப்புகளுக்கு பாதி புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து கொடைக்கானல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் எமிலி ரோஸ் கூறுகையில், ‘கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள 77 பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் முதல் தவணையாக வழங்கப்பட்டுள்ளது. நேற்று மீதமுள்ள பாட புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு சில பள்ளிகளுக்கு விரைவில் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது’ என்றனர். எனவே தமிழக அரசு மாணவர்களுக்கு விரைவில் பாட புத்தகங்கள் வழங்க வேண்டும் என பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் தெரிவித்துள்ளனர். தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறப்பிற்கு முன்பே பாடப்புத்தகங்கள் அனைத்தும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு விட்டன. புதிய பாடத்திட்டத்தின் கீழ் 220 நாட்கள் படித்தால்தான் மாணவர்கள் சிறந்த எதிர்காலத்தை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : schools ,Kodaikanal ,
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...