புரட்சி பாரதம் கட்சியின் மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனை

திருவள்ளூர், ஜூன் 25:   புரட்சி பாரதம் கட்சியின் மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் பூந்தமல்லியில் நடைபெற்றது. கட்சித் தலைவர் பூவை எம்.ஜெகன் மூர்த்தி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மாநில நிர்வாகிகள் பூவை முகிலன், ஐ.ஏழுமலை, எம்.மாறன், முல்லை கே.பலராமன், பழஞ்சூர்  பி.வின்சென்ட், தளபதி செல்வம், மணவூர் ஜி.மகா, கே.எம்.ஸ்ரீதர்,  பி.பரணிமாரி, வளசை எம்.தருமன், பி.சைமன்பாபு, சி.ஜெய்சுந்தர், பிரீஸ் பன்னீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூவை ஆர்.சரவணன்,  டி.ருசேந்திரகுமார், கூடப்பாக்கம் இ. குட்டி,கே.எஸ்.ரகுநாத், என்.மதிவாசன் ஆகியோர் வரவேற்றனர். இந்த கூட்டத்தில் தற்போது தமிழகத்தில் நிலவி வரும் கடும் குடிநீர் பிரச்னையை போக்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்,   

அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கல்வி கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளி கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், கூட்டுறவு தேர்தலிலும்  இட ஒதுக்கீட்டிணை நடைமுறைப்படுத்தக் கோருவது என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.  இதில் மாநில நிர்வாகிகள்   தாமஸ்பர்னபாஸ், ஜான்சன் ஆம்ஸ்ட்ராங், ரமேஷ், சி.முருகா, உமாதேவி, ஸ்டெல்லா, டி.கே.சி.வேணுகோபால்,  எஸ்.ஏகாம்பரம், ரமேஷ், எட்மண்ட், சி.பி.குமார், எஸ்.பி.சி.தனசேகர், கோலடி பாரதி, கண்ணதாசன், நயப்பாக்கம் மோகன், ஆர்.கே பேட்டை ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

× RELATED டிடிவி தினகரன், கட்சியை பற்றி...