புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஊழியர்கள் போராட்டம்

புழல், ஜூன் 25: சென்னை புழலில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையம் உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். இதில் தனியார் நிறுவனத்தின் மூலம் காவலர்கள் 18 பேர் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு தொழிலாளிக்கும் மாதம்தோறும் ₹6500 ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக சம்பளம் சரிவர வழங்கப்படவில்லை. இம்மாதம் இதுவரை சம்பளம் வழங்கப்படாததால், பணியாற்றும் காவலர்கள் கடந்த 3 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags :
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணி...