திருப்பூரில் தியான திருவிழா

திருப்பூர், ஜூன்25:இதய நிறைவு நிறுவனம், ஸ்ரீ ராம் சந்திர மிஷன் சார்பில் ‘தியான உத்சவம்’ (தியான திருவிழா) பயிற்சி திருப்பூர் ஸ்ரீவேலாயுதசாமி திருமண மண்டபத்தில் நேற்று முன் தினம் துவங்கியது. இதில், அடிப்படை, புத்துணர்வு, நிறைவு பயிற்சி மூன்று நாட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. முதல் நாள் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம், சைமா தலைவர் ஈஸ்வரன், இதய நிறைவு நிறுவனம் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், திருப்பூர் மைய ஒருங்கிணைப்பாளர் குப்தா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தியானத்தின் நன்மைகள்  குறித்து சேலம் மைய ஒருங்கிணைப்பாளர் கஸ்தூரி பேசினார். சிறப்பு அழைப்பாளராக திரைப்பட இயக்குனர் லிங்குசாமி கலந்து கொண்டார். முதல் நாள் நிகழ்வில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர். நேற்று நடந்த 2ம் நாள் நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார், ஆண்டவர்ராமசாமி, டாக்டர் ராமசாமி, டெக்பா தலைவர் ஸ்ரீகாந்த் எழிலரசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தியான வகுப்புகள் தினமும் மாலை 5 மணிக்கு மேல் துவங்குகிறது. இன்று மாலையுடன் தியான திருவிழா நிறைவு பெறுகிறது.

Tags : Meditation Festival ,Tirupur ,
× RELATED திருத்துறைப்பூண்டியில் இலவச பல் சிகிச்சை முகாம்