கிட்ஸ் கிளப் மெட்ரிக் பள்ளியில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்

திருப்பூர், ஜூன் 25: திருப்பூரில் உள்ள கிட்ஸ் கிளப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 21ம் தேதி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் அனைவரும் யோகா செய்து மகிழ்ந்தனர். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக யாழி ஸ்போர்ட்சை சேர்ந்த கோவிந்தசாமி, விஷ்ணு கோவிந்த், யோகா ஆசிரியர் ரம்யா, கிரிக்கெட் பயிற்சியாளர் துரைசாமி, டி.என்.பி.எல் பந்துவீச்சு பயிற்சியாளர் பழனியப்பன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தினர்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் கிட்ஸ் கிளப் பள்ளியின் தலைவர் மோகன் கார்த்திக், தாளாளர் வினோதினி கார்த்திக், செயளாலர் நிவேதிகா ஸ்ரீராம் மற்றும் பள்ளி முதல்வர் ஆசிரியர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Tags : Yoga Day Celebration ,School ,Kids Club Metric ,
× RELATED பள்ளி ஆண்டு விழா