சினிமா சிகை அலங்கார ஊழியர் தற்கொலை

சென்னை, ஜூன் 25: கோடம்பாக்கம் பாரதி காலனி 5வது தெருவை சேர்ந்தவர் ெவங்கட்ராமன் (45). சினிமா துறையில் சிகை அலங்காரம் செய்து வந்தார். இவருக்கு அய்மாவதி (41) என்ற மனைவியும், சுப்பிரமணியன், லஷ்யா வினை என்ற மகன்களும் உள்ளனர். வெங்கட்ராமன், பிரபல நடிகர் மற்றும் நடிகைகளுக்கு அலங்காரம் செய்து உள்ளார். சமீபகாலமாக இவருக்கு சரியாக வேலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. பள்ளி மற்றும் கல்லூரி படித்து வரும் மகன்களின் கல்வி செலவுக்காக வெங்கட்ராமன் பலரிடம் கடன் கேட்டுள்ளார். ஆனால், யாரும் அவருக்கு கடன் கொடுக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த அவர் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளிவே சென்ற அவரது மனைவி அய்மாவதி கணவர் தூக்கில் தொங்குவதை பார்த்து அலறி துடித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வடபழனி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடல் மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Cinema hairdresser suicide ,
× RELATED மகா சிவராத்திரியை முன்னிட்டு 250 சிறப்பு பஸ்கள் இயக்கம்