×

ஊத்துக்கோட்டை அருகே நெடுஞ்சாலைத்துறைக்கு எதிராக கிராம மக்கள் போராட்டம்: வேகத்தடையில் ஒளிரும் விளக்கு பொருத்த கோரிக்கை

ஊத்துக்கோட்டை, ஜூன் 25: பாலவாக்கம் பகுதியில் வேகத்தடைக்கு வெள்ளை அடிக்க கோரி சாலை மறியல் செய்ய பொதுமக்கள் முயற்சித்தனர். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அதனை தடுத்து நிறுத்தினர். சென்னை - திருப்பதி  நெடுஞ்சாலையில் ஊத்துக்கோட்டை அருகே பாலவாக்கம், தாராட்சி ஆகிய கிராமங்கள் உள்ளது. இக்கிராமங்களின் ஊர் எல்லை மற்றும் பள்ளிக்கூடங்கள் இருக்கும் பகுதியிலும் நேற்று முன்தினம் மாலை நெடுஞ்சாலைத் துறை மூலம் விபத்துக்களை தடுக்க சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்கப்பட்டது.  இந்த வேகத்தடை அமைத்த பிறகு அதன் மீது வெள்ளை அடித்தும், அதன் அருகில் ஒளிரும் விளக்குகள் பொருத்த வேண்டும். ஆனால் இதை நெடுஞ்சாலை துறையினர் செய்யவில்லை.

இதனால் அப்பகுதி வழியாக சென்ற இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல் சென்று கீழே விழுந்து காயமடைந்தனர்.  இதனால் ஆத்திரமடைந்த பனப்பாக்கம் மற்றும் பாலவாக்கம் பகுதியை சேர்ந்த சிலர் வேகத்தடைக்கு வெள்ளை அடித்து, ஒளிரும் விளக்குகள் அமைக்க வேண்டும் என கூறி சாலை மறியல் செய்ய முற்பட்டனர். இதையறிந்த ஊத்துக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பொதுமக்களிடம் வேகத்தடை அமைக்கப்பட்ட இடத்தில் வெள்ளை அடித்து, ஒளிரும் விளக்குகள் பொறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : Residents ,highway ,Uthukkottai ,
× RELATED கலவை- வாழைப்பந்தல் நெடுஞ்சாலையில் மரங்களை மர்ம நபர்கள் தீ வைத்து எரிப்பு