×

மாவட்டம் முழுவதும் பரவலாக மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

திருவள்ளூர், ஜூன் 25: திருவள்ளூர் மாவட்டத்தில் 6 மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு 132 மி.மீட்டர் மழை பெய்தது. இதில், அதிகபட்சமாக திருத்தணியில் 39 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. வெப்பம் சற்று தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகிறது. எங்கு பார்த்தாலும் மக்கள் காலிக் குடங்களுடன் தண்ணீர் தேடி அலைகின்றனர். தகிக்கும் வெயிலால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்துவந்தனர்.  

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 7 மணிக்கு மேல் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆங்காங்கே பரவலாக மழை கொட்டியது. பெரிய அளவில் இல்லாவிட்டாலும் இந்த மழை மக்களுக்கு மகிழ்ச்சியை தந்தது. மாவட்டத்தில் திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பொன்னேரி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, பூண்டி, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சிறிய மழை என்றாலும் 6 மாதங்களுக்கு பிறகு கோடையில் பெய்யும் முதல் மழை என்பதாலும் வெப்பம் தணிந்ததாலும் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags : district ,
× RELATED தபால் வாக்கு செலுத்த ஏதுவாக போலீசாருக்கு சிறப்பு வாக்கு சாவடி மையம்