வாகன விபத்தில் புது மாப்பிள்ளை பலி: தந்தை படுகாயம்

கூடுவாஞ்சேரி, ஜூன் 25: கூடுவாஞ்சேரி அருகே, நடந்த வாகன விபத்தில், புது மாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார். பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் வசித்தவர், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வகணேஷ் (30). திருமுடிவாக்கத்தில் உள்ள தனியார் கார் உதிரிபாகம் தயாரிக்கும் கம்பெனியில் சூபர்வைசராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தேவி. இவர்களுக்கு திருமணமாகி 5 மாதங்கள் ஆகிறது. தேவி தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், செல்வகணேஷ் அரியலூருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் சென்றார். அங்கிருந்து, தனது தந்தை அன்பழகனுடன் (60), பைக்கில் நேற்று காலையில் சென்னைக்கு புறப்பட்டார்.

கூடுவாஞ்சேரி அருகே ஜிஎஸ்டி சாலையில், நேற்று மாலை சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரன பைக், தறிக்கெட்டு ஓடி, சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதை பார்த்ததும், அப்பகுதி மக்கள் ஓடி வந்து, 2 பேரையும் மீட்டு குரேம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு சிக்கிச்சை பலனின்றி செல்வகணேஷ் இறந்தார். அன்பழகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின்படி கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : vehicle accident ,
× RELATED சேலம் அருகே மகள்களுக்கு பாலியல்...