×

மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டியில் ஆலோரை அணி வெற்றி

குன்னூர், ஜூன் 25:  குன்னூரில் ஹாக்கி நீல்கிரீஸ் மற்றும் ஜி.பி.எம். வாரியர்ஸ் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டியில் ஆலோரை அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியின் முதல் அரையிறுதியில் ஜி.பி.எம்.வாரியர்ஸ் அணி மற்றும் பேரணி போட்டியிட்டது. இதில் 3-0 என்ற கோல் கணக்கில் ஜி.பி.எம். வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆலோரை அணியும், நெப்டியூன் அணியும் மோதியது. இதில் 3-0 என்ற கோல் கணக்கில் ஆலோரை அணி வெற்றி பெற்றது.  அதனை தொடர்ந்து நேற்று நடந்த இறுதிப்போட்டியில் ஜி.பி.எம்.வாரியர்ஸ் அணியும்,  ஆலோரை அணியும் மோதியது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்ததால், பெனால்டி ஷூட் அவுட் முறை வழங்கப்பட்டது. இதில் ஆலோரை அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.  இதை தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் ஹாக்கி நீல்கிரீஸ் அணியின்  பொருளாளர் ராஜா வரவேற்புரையாற்றினார். இரண்டாவது இடம் பிடித்த ஜி.பி.எம். வாரியர்ஸ் அணிக்கு மின்வாரிய கணக்கு அலுவலர் கணேஷ் ராஜா பரிசு வழங்கினார். முதலிடம் பிடித்த ஆலோரை அணிக்கு ஹாக்கி நீல்கிரீஸ் துணை தலைவர் சுரேஷ்குமார் மற்றும் செயலாளர் பாலமுருகன் கோப்பை வழங்கினார்.

Tags : team ,Aloor ,hockey tournament ,
× RELATED தென்மேற்கு பருவமழை ஜூனில் தொடக்கம்: அணைகளை ஆய்வு செய்ய குழு அமைப்பு