தீபாவளி முன்பதிவு துவங்கியது சென்னை ரயில்களுக்கு கிராக்கி

கோவை, ஜூன் 25:அக்டோபர் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை வருகிறது.   தீபாவளி ரயில்களுக்கான முன்பதிவு நேற்று துவங்கியது. இதில், தீபாவளிக்கு 5 நாட்கள் முன்பு, அதாவது, அக்டோபர் 22ம் தேதி சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கு நேற்று காலை முன்பதிவு நடந்தது. முன்பதிவு துவங்கிய ஒரு சில மணி நேரங்களில் கோவையில் இருந்து சென்னைக்கு செல்லும் முக்கிய ரயில்களில் முன்பதிவு வேகமாக நடந்து வருகிறது. ஆன்லைன் மூலம் பலர் முன்பதிவு செய்து வருகின்றனர். நேற்று மாலை நிலவரப்படி சேரன் எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ், வெஸ்ட் கோஸ்ட், சென்னை எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ் ரயில்களில் பெரும்பாலான சீட்கள் முன்பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில், அக்டோபர் 23ம் தேதி பயணம் மேற்கொள்பவர்களுக்கு இன்றும், அக்டோபர் 24ம் தேதி பயணம் செய்பவர்கள் நாளையும், அக்டோபர் 25ம் தேதி பயணம் செய்பவர்கள் 27ம் தேதியும், அக்டோபர் 26ம் தேதி செல்பவர்கள் 28ம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Tags : booking ,Chennai ,
× RELATED மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளை கண்காணிக்க அலுவலர் நியமனம்