×

ஊட்டி - குன்னூர் இடையே இயக்கப்படும் அரசு பஸ்சில் ‘ஓட்டை’பயணிகளுக்கு பாதுகாப்பற்ற பயணம்

ஊட்டி,  ஜூன் 25:     நீலகிரி மாவட்டத்தில் உள்ள சாலைகள்  குறுகியும், அதிக வளைவுகளை கொண்டதாகவும் உள்ளது. இதனால், இச்சாைலயில்  பாதுகாப்பாக பயணிக்கும் நோக்கில் கடந்த 50 ஆண்டுகளாக சிறிய பஸ்கள்  இயக்கப்பட்டு வருகிறது. சமவெளிப் பகுதிகளில் இயக்கப்படும் நீண்ட பஸ்கள்  நீலகிரி மாவட்டத்தல் இயக்கினால், போக்குவரத்து நெரிசல், வளைவுகளில் திருப்ப  முடியாமல் ஓட்டுநர்கள் அவதிப்படுவது என பல்வேறு பிரச்னைகளின் காரணமாகவே  சிறிய பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போது ஊட்டி அரசு போக்குவரத்து  கழக பொதுமேலாளர், நஷ்டத்தை குறைப்பதாக கூறி பெரும்பாலான  கிராமப்புறங்களுக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பஸ்களை ரத்து செய்துவிட்டார்.  தற்போது நீண்ட, அதாவது அதிக இருக்ககைகள் கொண்ட பஸ்கள் இயக்கப்பட்டு  வருகிறது.     இது ஒரு புறம் இருக்க இந்த பஸ்கள் தரமானதாகவும் இல்லை. ஒரு சில பஸ்களில்  பிளாட்பாரத்தில் பயணிகள் தவறி விழும் வகையில் ஓட்டைகள் உள்ளன. எனினும், இது  போன்ற டப்பா பஸ்களை தொடர்ந்து போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது. இதனை  முறையாக ஆய்வு செய்து அனுமதி வழங்க வேண்டிய ஆர்டிஓ., அதிகாரிகளும் கண்டுக்  கொள்ளாத நிலையில், போக்குவரத்து கழகமும், டப்பா பஸ்களை தொடர்ந்து இயக்கி  வருகிறது. நேற்று காலை குன்னூரில் இருந்து ஊட்டி நோக்கி ஒரு அரசு பஸ்  வந்துள்ளது. இந்த பஸ்சில் சுமார் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர்.  இந்த பஸ்சின் பின்புறம் சக்கரத்தின் மேல் பகுதியில் உள்ள பிளாட்பாரம்  உடைந்து பெரிய அளவிலான ஓட்டை காணப்பட்டது. மேலும், பஸ் ஓடும் ேபாது,  சாலையில் உள்ள மண், தண்ணீர் ஆகியவையும் பஸ்சிற்குள் வந்துள்ளது.  இதனால்  பெரும்பாலான பயணிகள் இந்த சீட்டில் அமருவதில்லை. மேலும் பயணிகள்  அச்சத்தில் நின்று கொண்டே பயணித்து வருகின்றனர். சில பயணிகள் ஏன் இது போன்ற  பஸ்களை இயக்குகிறீர்கள் என ஓட்டுநரிடம் கேட்ட போது, அவர், நாங்கள் என்ன  செய்வது, எங்களை இந்த பஸ்சை எடுத்து செல்ல அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.  நாங்கள் பஸ்சை எடுத்து வருகிேறாம், என கூறுகின்றனர்.  எனவே, மாவட்ட நிர்வாகம் போக்குவரத்து கழகத்தில் இயக்கப்படும் பஸ்களை  உடனடியாக ஆய்வு செய்து, ஓட்டை, உடைசல் பஸ்களை இயக்குவதை தடுக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும். ேமலும், ஆபத்து நிறைந்த சாலைகளில் சிறிய பஸ்களை இயக்க  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : Ooty ,passengers ,Coonoor ,
× RELATED மழை பெய்யாத நிலையில் ஊட்டி ரோஜா பூங்காவில் மலர்கள் பூப்பதில் தாமதம்