×

திருப்போரூர் அருகே வெல்டிங் கடையில் 3வது முறை கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலை

திருப்போரூர், ஜூன் 25: திருப்போரூர் அருகே வெல்டிங் கடையில் 3வது முறையாக நடந்த கொள்ளை சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். திருக்கழுக்குன்றம் அடுத்த கழனிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மன்னார் (36). திருப்போரூர் அருகே காலவாக்கம் பழைய மாமல்லபுரம் சாலையில் ஸ்டீல் கதவுகள், இரும்பு கிரில் கேட்கள் தயாரிக்கும் வெல்டிங் கடை நடத்தி வருகிறார். தினமும் மன்னார், காலை 9 மணிக்கு திறந்து மாலை 7 மணிக்கு கடையை பூட்டி விட்டு சென்று விடுவார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடையை திறக்கவில்லை. நேற்று காலை 7 மணியளவில் மன்னாரின்வெல்டிங் கடையின் முன் பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராக்கள் உடைக்கப்பட்டு கிடந்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக அவருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில், மன்னார் அங்கு சென்று பார்த்தார். அப்போது, நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள், வெல்டிங் கடையின் வெளியே பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்துள்ளனர். அவரது கடையை ஒட்டி இருந்த சத்திய நாராயணன் என்பருக்கு சொந்தமான கடையின் பூட்டை உடைத்து, உள்ளே இருந்த காஸ் வெல்டிங் மெஷின், காஸ் சிலிண்டர், காஸ் கட்டிங் டார்ச் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரிந்தது. தகவலறிந்து, திருப்போரூர் எஸ்ஐ ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். கொள்ளையர்கள் ஒரே கடையினை குறிவைத்து தொடர்ச்சியாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.

கடையில் பொருத்தப்பட்ட கேமராக்களை ஆய்வு செய்ததில் மர்மநபர்கள் முகத்தை லுங்கியால் மூடிக்கொண்டு, கைகளில் கிளவுஸ் அணிந்துக் கொண்டு இரும்பு கம்பியால் கேமராக்களை உடைப்பது பதிவாகி உள்ளது. ெதாடர்ந்து போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். அப்போது, மன்னாரின் வெல்டிங் கடையில்  கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி, சுமார் ₹6 லட்சம் மதிப்புள்ள வெல்டிங்  மெஷின்கள், காப்பர் வயர்களும், அக்டோபர் 28ம் தேதி ₹1.5 லட்சம் மதிப்புள்ள  காப்பர் வயர்களும் திருடப்பட்டது. அதேபோன்று  சத்தியநாராயணன் கடையிலும் வெல்டிங் மெஷன்கள் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : robbery ,welding shop ,Tiruppore ,mystery persons ,
× RELATED சென்னை தாம்பரம் அருகே படப்பை பஜாரில்...