×

தண்ணீர் பஞ்சத்தை தீர்க்காத அதிமுக அரசைக் கண்டித்து காஞ்சி வடக்கு, தெற்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம், ஜூன் 25: தண்ணீர் பஞ்சத்தை தீர்க்காத அதிமுக அரசைக் கண்டித்து, காஞ்சிபுரம் வடக்கு, தெற்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் பல இடங்களில் குடிநீருக்காக பொதுமக்கள் அல்லல்படும் அவல நிலை உள்ளது. கடும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக இம்மாவட்டத்தில் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய உத்திரவிட்டுள்ளனர். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் தண்ணீர் கிடைக்காமல் தவிக்கின்றனர். ஏரிகள், குளங்கள் அனைத்தும் வறண்டதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து ஆழ்துளைக் கிணறுகளில் நீர் கிடைக்காமல் மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.

மொத்தத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் வரலாறு  காணாத கடும் தண்ணீர் பஞ்சத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க தவறிய அதிமுக அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்து தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் பொதுமக்களின் ஆதரவுடன் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையொட்டி, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் தாம்பரம் சண்முகம் சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ தலைமையில் நேற்று நடந்தது. தாம்பரம் நகரச் செயலாளர் எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ வரவேற்றார். மாவட்ட அவைத் தலைவர் த.துரைசாமி, துணை செயலாளர்கள் விசுவநாதன், அன்புச்செழியன், கலைவாணி காமராஜ், மாவட்ட பொருளாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எம்எல்ஏக்கள் கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், அரவிந்த்ரமேஷ், செந்தில் இதயவர்மன், தலைமை தீர்மானக் குழு உறுப்பினர் மீ.அ.வைதியலிங்கம், ஒன்றிய நகர செயலாளர்கள் வீ.தமிழ்மணி,மாநில வர்த்தக அணி துணை செயலாளர் வி.எஸ்.ராமகிருஷ்ணன்,  எம்.கே.தண்டபாணி, படப்பை ஆ.மனோகரன், ஜெ.சண்முகம், வே.கருணாநிதி, டி.பாபு, எஸ்.நரேந்திரன், ப.ரவி, ந.கோபால், எஸ்.டி.கருணாநிதி, இரா.நரேஷ்கண்ணா, ஏ.ஆர்.டி.லோகநாதன், பையனூர் எம்.சேகர், மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் செந்தில் தேவராஜ், கே.ஜாகீர் உசேன், மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் சி.பரிமளா, மீரா சபாபதி, மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் எல்.பிரபு, என்.கனகராஜ், எஸ்.கே.நெப்போலியன், படப்பை ராஜேந்திரன், பா.ஞானபிரகாசம், மேடவாக்கம் த.ஏழுமலை, க.துரை, மு.ஆதிமாறன், தி.க.பாஸ்கர், பா.குறிஞ்சி சிவா, ஒ.இ.ஈஸ்வரி, ஆர்.கோவிந்தன், செங்கை சி.என்.செல்வமூர்த்தி, ஏ.கே.கருணாகரன், லயன் எஸ்.சங்கர், டி.காமராஜ், எஸ்.சதீஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக் நன்றி கூறினார்.

அதே போல் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் சார்பில்  காஞ்சிபுரம் நடுத்தெரு - காமராஜர் சாலை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்டச் செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் சுகுமார், தசரதன், எம்எல்ஏக்கள் வக்கீல் எழிலரசன், புகழேந்தி, ஆர்.டி.அரசு, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சேகரன், நாகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டம் முழுவதும் தண்ணீர் பிரச்னையால் வணிகர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தண்ணீர் பிரச்னையை தீர்க்க தொலைநோக்கு பார்வையில்லாமல் செயல்படும் அதிமுக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்பது உள்பட பல்வேறு கண்டன கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் தொண்டர் அணி சுகுமாரன், மாநில நெசவாளர் அணி அன்பழகன், பொதுக்குழு ஊறுப்பினர்கள் செங்குட்டுவன், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், ஞானசேகரன், சேகர், சாலவாக்கம் குமார், குமணன், ஸ்ரீதரன், ராமச்சந்திரன், கண்ணன், தம்பு, சத்தியசாய், சரவணன், ஏழுமலை, பேரூர் செயலாளர்கள் பாரிவள்ளல், பாண்டியன், இனியரசு, மதுராந்தகம் நகர செயலாளர் குமார், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் அப்துல்மாலிக், யுவராஜ், கே.மணி, செல்வி, அபுசாலி, ஏ.வி.சுரேஷ்குமார், வேதாசலம். சோழனூர் ஏழுமலை, கார்த்திகேயன், நாத்திகம் நாகராஜன், இளைஞரணி ரவிக்குமார், காஞ்சிபுரம் நகர நிர்வாகிகள் சந்துரு, கருணாநிதி, வெங்கடேசன், வ.கந்தசாமி, ஜெகநாதன், சிகாமணி, விஸ்வநாதன், எஸ்.கே.பி.சீனிவாசன் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags : Demonstration ,DMK ,Kanchi North ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...