கல்லூரி மாணவர்கள் பேரணி

மதுராந்கம், ஜூன் 25: கருங்குழி பேரூராட்சியில், கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடந்தது. மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சியில், கிண்டி பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் 85 பேர் கலந்து கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. கடந்த 15ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடந்த நிகழ்ச்சிகளில், மாணவர்கள் இப்பகுதியில் பல்வேறு பணிகளை மேற்கொண்டனர். குறிப்பாக பேரூராட்சிக்கு உட்பட்ட 2 குளங்களை சுத்தப்படுத்துதல், 4 கோயில்களை தூய்மைப்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொண்டனர்.

மேலும், 2 அரசு பள்ளிகளில் சுகாதாரம், மற்றும் திடக்கழிவு மேலாண்மை, கல்வி கற்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தி, முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர். இறுதியில் பர்வதராஜன் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் அருகே மழைநீர் சேகரிப்பு, முழு சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை போன்றவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட தெரு நாடகம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : College students ,
× RELATED கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை