28ம் தேதி காஸ் குறைதீர் கூட்டம்

காஞ்சிபுரம், ஜூன் 25: காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை. காஸ் நுகர்வோர்களுக்கு ஏற்படும் காலதாமதம் மற்றும் குறைகளை பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதில் முகவர்களிடம் ஏற்படும் காலதாமதம் ஆகியவற்றை களைய ஜூன் 28ம் தேதி காலை 10.30 மணியளவில் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது. இதில் காஸ் நுகர்வோர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு, தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Tags : Cass Oath Meeting ,
× RELATED சோலைமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா அக்.28ல் துவக்கம்