×

மதுராந்தகம் அரசு பள்ளிக்கு செல்லும்போது பள்ளி மாணவிகளுக்கு தொல்லை கொடுக்கும் வாலிபர்கள்

* சீறி வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்து
* போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மதுரந்தகம், ஜூன் 25: பள்ளி மாணவிகளுக்கு, சில வாலிபர்கள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர். இந்த பிரச்னையை தீர்க்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். மதுராந்தகத்தில், 2 பெரிய அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. மேலும், பல்வேறு அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் இயங்குகின்றன. குறிப்பாக மதுராந்தகம் பார்த்தசாரதி தெருவில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 3 ஆயிரம் மாணவிகள் படிக்கின்றனர். இதில் பெரும்பாலானோர் கிராமப் பகுதிகளில் இருந்து மதுராந்தகத்துக்கு பஸ்சில் வந்து, அங்கிருந்து சுமார் 1 கிமீ நடந்து செல்கின்றனர்.

சூனாம்பேடு - மதுராந்தகம் சாலையை கடந்து பள்ளிக்கு செல்ல வேண்டும். இவர்கள் சாலையைக் கடக்கும் போது, சூனாம்போடு சாலையில் மதுராந்தகம் நோக்கி ரயில்வே மேம்பாலத்தின் மீது வாகனங்கள் வேகமாக வருகின்றன. அப்போது, பள்ளிக்கு செல்லும் மாணவிகள் அவசர அவரசமாக சாலையை கடக்கும்போது, வேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டுள்ளன. குறிப்பிட்ட அந்த பகுதியில் போக்குவரத்து போலீசாரை நிறுத்தி, மாணவிகள் சாலையை கடந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களின், பெற்றோர்கள் கூறுகின்றனர். அதேபோல், பள்ளி நேரத்தில், மாணவிகள் சென்று வரும்போது, சாலையோரத்தில் சில வாலிபர்கள் பைக்கில் வந்து, அவர்களை கேலி கிண்டல் செய்யும் சம்பவமும் தொடர்ந்து கொண்டே இருகின்றது.

இதுபோன்ற நடவடிக்கைகளை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர். மேலும், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே அமைந்துள்ள தனியார் பள்ளி மாணவர்கள், பள்ளிக்கு செல்லும் நேரங்களில் போக்குவரத்தை சரி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. எனவே, மதுராந்தகம் போக்குவரத்து போலீசார் பள்ளிக்கு மாணவ, மாணவிகள் செல்லும் காலை மற்றும் மாலை நேரங்களில், போக்குவரத்தை சீரமைக்க வேண்டும். மாணவிகளுக்கு தொந்தரவு கொடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Plaintiffs ,schoolchildren ,school ,
× RELATED ஸ்ரீநகரில் ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து..!!