×

காஞ்சிபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம், ஜூன் 25: காஞ்சிபுரம் மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், காஞ்சிபுரம் காவலான்கேட் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் சாரங்கன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் லிங்கநாதன், பெருமாள், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் மோகனன், செயலாளர் நேரு, பொருளாளர் மாரி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கோவிந்தன், நிர்வாகிகள் பாஸ்கர், லாரண்ஸ்,

ஜீவா, ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். காஞ்சிபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ₹ 25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம் குட்டைகளை ஆழப்படுத்தி தூர்வார வேண்டும். பாலாறு மற்றும் செய்யாற்றில் 5 கிமீ க்கு ஒரு தடுப்பணை கட்டவேண்டும். கால்நடைகளுக்கு முழு மானியத்துடன் தீவனம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Tags : Kanchipuram district ,drought district ,
× RELATED மாற்றுத்திறனாளிகள் பழைய பஸ்பாசை ஜூன்...