×

வெளிமாநில சுற்றுலா செல்லும் முதியவர்கள்


கோவை, ஜூன் 25: வெளிமாநிலங்களுக்கு சுற்றுலா செல்லும் முதியவர்கள் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.  கோவை, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 60க்கும் மேற்பட்டவர்கள் வடமாநிலத்திற்கு ஆன்மீக சுற்றுலா மேற்கொண்டனர். இவர்கள், உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசி, ஆக்ரா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டு கடந்த 10ம் தேதி கேரளா எக்ஸ்பிரஸ் மூலம் கோவை திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது, அப்பகுதியில் நிலவி வந்த கடும் வெயில் காரணமாக கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்த கலாதேவி (58), தெய்வானை(74), நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பச்சையா(80), சுப்பையா(71), பாலகிருஷ்ணன்(67) ஆகியோர் உயிரிழந்தனர்.

 இதனை தொடர்ந்து வெளிமாநிலங்களுக்கு சுற்றுலா செல்லும் முதியவர்கள் தங்களின் உடல்நிலை குறித்து பரிசோதித்து கொள்ள வேண்டும் என சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.  இது குறித்து சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது: அமர்நாத் போன்ற புனித யாத்திரை மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு சான்றிதழ் அளிக்கப்படுகிறது. குளிர் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆனால், சுற்றுலா சென்றவர்கள் வெய்யிலின் தாக்கத்தால் உயிரிழந்ததாக எந்த பதிவும் இல்லை. முதல் முறையாக இப்பிரச்னை ஏற்பட்டுள்ளது.  இதனை கருத்தில் கொண்டு வடமாநிலங்களுக்கு சுற்றுலா செல்லும் முதியவர்கள், மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலை, 10:00 மணி முதல் மதியம் 2:30 மணி வரை பயணத்தை தவிர்ப்பது நல்லது. பயணத்தின் போது அதிகளவில் தண்ணீர் குடிப்பது நல்லது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
.

Tags : Persons ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...